×

பிரிவினைவாத கொள்கையை ஆதரித்த பஞ்சாப் எம்எல்ஏ கைராவை சந்திக்க கெஜ்ரிவால் மறுப்பு

புதுடெல்லி: பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரும் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுக்பால் சிங் கைராவை சந்திக்க ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்து இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் தங்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து போராட சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு உரிமை உண்டு என கருத்து தெரிவித்து சீக்கிய பிரிவினைவாதிகளின் தனிநாடு கோரிக்கைக்கு (ரெபரண்டம் 2020) கடந்த வாரம் ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில ஏஏபி எம்எல்ஏவும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான கைரா கருத்து தெரிவித்தது அங்கு சர்ச்சையை கிளப்பி உள்ளது.பிரிவினைவாத சக்திகளுக்குத் துணை போகும் கைராவை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாஜ என கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் அவருக்கு அரசியல் அரங்கில் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டு உள்ளது.கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே தூக்க வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதக் கடுமையாக வலியுறுத்தி உள்ளார்.

மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சாகோட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் படுதோல்வியை ஏஏபி தழுவியது. வலுவான நிலையில் கட்சி அங்கு இல்லாத நிலையில், தோற்றுவிடுவோம் என்பதால் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் எனக் கூறியும், கேட்காமல் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்து, அதனால் அங்கு டெபாசிட் இழந்தோம் என தோல்விக்கு கெஜ்ரிவால் மீது பழியை போட்ட கடுப்பில் ஆம் ஆத்மி ஏற்கனவே இருந்து வருகிறது.இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டு நெருக்கடியில் இருந்து வரும் கைரா, தனது நிலைமையை விளக்கிக் கூறுவதற்காக டெல்லியில் முகாமிட்டு கெஜ்ரிவாலை சந்திக்க முயற்சித்தார். ஆனால், அவரை சந்திக்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.அதையடுத்து, துணை முதல்வர் சிசோடியாவை சந்திக்க அவர் முயன்றார். சிசோடியாவும் அவரை சந்திக்க மறுத்ததோடு, சர்ச்சை கருத்து வெளியிட்டதை ஆதரிக்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்ததோடு, அவரது கருத்தால் பஞ்சாபில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவை சரி செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!