×

சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கோரிக்கை தேசிய தூய காற்று திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்

புதுடெல்லி: தேசிய தூய காற்று திட்ட அமலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டுமென கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை  வலியுறுத்தி உள்ளது.டெல்லியில் கடந்த சில ஆண்டாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக 5 நாட்களாக அங்கு  காற்று மாசு தீவிரம் மற்றும் மிக தீவிரமான கட்டத்திலேயே இருந்தது. இதே போல, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அடிக்கடி  புழுதிப் புயல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த தேசிய தூய காற்று திட்டம் (என்.சி.ஏ.பி)  என்ற திட்டத்தை மத்திய அரசு  உருவாக்கியது.  
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் 100 நகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திட்ட வரைவு அறிக்கை  தயாரிக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கிரீன்பீஸ் இந்தியா  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி சுனில் தஹியா கூறுகையில், ‘‘டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் காற்று  மாசு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது அமைதியான, கண்ணுக்கு தெரியாத கொலையாளி. மேலும் இது தேசிய பொது சுகாதாரத்திற்கே நெருக்கடி நிலையை ஏற்படுத்தக் கூடியது. இந்த  அச்சுறுத்தலுக்கு, அதிகளவில் காற்று மாசு ஏற்படுத்துவர்களே பொறுப்பு. எனவே தேசிய தூய காற்று திட்டத்தை அமல்படுத்துவதற்கான  நடைமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED மோடி மேடையில் அழுவதை விரைவில் பார்க்கலாம் : ராகுல் காந்தி விமர்சனம்