×

ஜெனீவா ஓபன் கால் இறுதியில் வாவ்ரின்கா

ஜெனீவா: ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் விளையாட சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா தகுதி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் இத்தொடரில் உலகின் 3ம் நிலை வீரரான வாவ்ரின்கா, அமெரிக்காவின் ஜெரட் டோனால்சனை எதிர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய வாவ்ரின்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் பபியோ பாக்னினி 6-7, 6-2, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் நோவா ருபினை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...