×

கோஹ்லி சவாலை ஏற்றார் பிரதமர் மோடி

‘வலுவான இந்தியாவை உருவாக்க நாம் வலுவாக இருப்போம்’ என்ற பிரசாரத்தை 3 நாட்களுக்கு முன் தொடங்கிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங், தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார். இதே போல் அனைவரும் தங்களது உடற்பயிற்சி வீடியோவை சமூக இணையதளத்தில் பகிரலாம் என கோரிக்கை விடுத்து, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அதையே சவாலாக ஏற்று கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘‘அமைச்சர் ரத்தோரின் சவாலை நான் ஏற்றுக் கொண்டேன்.

இதே போல் எனது மனைவி அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் டோனி, பிரதமர் மோடி ஆகியோரும் இந்த சாவலை ஏற்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என கருத்து தெரிவித்திருந்தார்.  இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘‘சவாலை ஏற்றுக் கொண்டேன் விராட். எனது உடல் தகுதி வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். அதே போல, கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற போட்டோவை போட்டு சவாலை ஏற்பதாக கூறியுள்ளார். இந்த சவால் ட்வீட்கள் நேற்று டிவிட்டரில் வைரலானது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!