×

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த அனுமதி கோரி வழக்கு

சென்னை : இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்படி உயிரிழிந்த  தமிழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள காளியப்ப கவுண்டன் புதூரில்  நினைவேந்தல் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு திராவிடர் விடுதலைக் கழக செய்தித் தொடர்பாளர் சண்முகவேல் பிரபாகர், வால்பாறை டிஎஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவை டிஎஸ்பி நிராகரித்துள்ளார். இந்நிலையில், இதனை எதிர்த்து சண்முகவேல் பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...