×

‘லெனின் பாண்டியன்’ படத்தில் ஷ்ரிதா ராவ்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.டி.பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘லெனின் பாண்டியன்’. கங்கை அமரன், ரோஜா ஜோடியுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரிதா ராவ், ‘ஆடுகளம்’ நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். 32 வருடங்களுக்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அவர் இசை அமைத்துள்ளார். விவசாயிக்கு பாதுகாப்பு, காவல்துறையின் அதிகார அத்துமீறல், மணல் மாஃபியா உள்பட பல்வேறு விஷயங்களை டிரைலர் பேசியது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 25ம் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கங்கை அமரனும், ரோஜாவும் ஒரு மரத்தடியில் அமர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு காவலாக தர்ஷன் கணேசன் நிற்கிறார். தமிழில் ‘கும்கி 2’, ‘படவா’, ‘டி.என் 2026’, ‘சிங்கா’ ஆகிய படங்களில் ஷ்ரிதா ராவ் நடித்திருக்கிறார்.

Tags : Sreetha Rao ,D.D. Balachandran ,Sathyajothi Films ,Gangai Amaran ,Roja ,Darshan Ganesan ,Aadukalam' ,Narain ,Yugendran ,Bose Venkat ,George Marian ,Archana ,Subbu Panchu ,Ilayaraja ,
× RELATED ஆகஸ்ட் 21ல் ‘மொத ராத்திரி’