- ராஜா கருப்பசாமி
- ரிஷிகாந்த்
- அனிஷ்மா அனில் குமார்
- சேதன்
- ஏ. வெங்கடேஷ்
- பக்ஸ்
- அப்துல் லீ
- ஷெல்லி கிஷோர்
- சங்கீதா பாலன்
- பானுப்ரியா
- சுமித்ரா தேவி
- வர்ஷினி கர்மேகம்
- கார்த்திகேயன்
- வேலன்
- கௌஷிக் கபிலன்
- மைத்ரி மூவி மேக்கர்ஸ்
- சுரேந்திரன் பரஞ்சோதி
ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ என்ற படத்தில் ஹீரோவாக ரிஷிகாந்த், ஹீரோயினாக ‘சிறை’, ‘யூத்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டர்களில் சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பிரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கவுசிக் கபிலன் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்ய, ஏ.பாலு மகேந்திரா அரங்கம் அமைத்துள்ளார். அசோக் அர்ஜூனன் எடிட்டிங் செய்ய, பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ராஜா கருப்பசாமி கூறுகையில், ‘இந்த கதையை நம்பி என்னை உற்சாகப்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படம் முடிந்த பிறகு கூட, இதிலுள்ள கேரக்டர்களை பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எனது ஆசை’ என்றார்.
