×

தைராய்டு பாதிப்பால் உடல் எடை அதிகரிப்பு: உருவகேலிக்கு ஆளான நடிகை உருக்கம்

மும்பை: பிரபல டி.வி நடிகை கிஷ்வர் மெர்ச்சன்ட், கடந்த 2021ல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு பிறகு அவரது உடல் எடையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. உடனே இணையதளங்களில் அவரை பலர் உருவகேலி செய்தனர். இந்நிலையில் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அது வருமாறு: எனது உடல் எடை அதிகரித்துள்ளது. அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை? கர்ப்ப காலத்தில் எனக்கு தைராய்டு பிரச்னை ஏற்பட்டது.

அப்படி இருக்கும்போது, எடையை குறைப்பது மிகவும் கடினம் என்பது, இதுகுறித்து எதுவுமே தெரியாத உங்களுக்கு புரியாது. எனது பெற்றோர், கணவர், குழந்தை ஆகியோர் இதுபற்றி எதுவும் சொல்லாதபோது, எங்களை போன்ற திரை பிரபலங்களை விலை கொடுத்து வாங்கிவிட்டது போல் நினைத்துக்கொண்டு கேள்வி கேட்க நீங்கள் யார்? மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்கள் முதலில் மனிதநேயத்துடனும், அன்பாகவும் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

கர்ப்பத்துக்கு முன்பு 68 கிலோவாக இருந்த எனது உடல் எடை, ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு கூட 72 கிலோவாகவே இருக்கிறது. நான் எப்போதும் போல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால், உடல் எடையை பற்றிக் கவலைப்படவில்லை. எனவே இணையத்தளங்கள் மூலமாகவும், நேரிலும் என்னை பற்றி விமர்சிப்பதை விட, பிறரிடம் அன்பாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

Tags : Urukam ,Mumbai ,Kishwar Merchant ,
× RELATED இயக்குனர்களுடன் உல்லாசமாக இருக்க...