×

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் கவுரி கிஷன் பங்கேற்பு

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி, டெல்லியில் காக்ரோஜ் ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் மீது டெல்லி காவல்துறை, துணை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், ‘96’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கௌரி கிஷன் டெல்லிக்கு சென்று, நேரடியாக போராட்டத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கையில் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் போராட்டத்துக்கு துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். இவர், 2018-ல் வெளியான ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ‘மார்கம்காலி’ என்ற மலையாள படத்திலும், ‘ஜானு’ என்ற தெலுங்கு படத்திலும் அடுத்தடுத்து அடியெடுத்து வைத்தார். மீண்டும் ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார்.

Tags : Kauri Kishan ,Delhi ,Chennai ,NEET ,Kakroj Janata Party ,Union Minister ,Dharmendra Pradhan ,Delhi Police ,Gauri Kishan ,
× RELATED ஜனநாயகன் விமர்சனம்…