×

தடுமாற வைத்த யஷ், தாரா சுதாரியா

மலையாள நடிகை கீது ேமாகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ என்ற பான்வேர்ல்ட் படத்தின் ‘தடுமாறுதே’ என்ற பாடலின் மூலம் ராயா, ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் புதிய பரிமாணத்தை யஷ், தாரா சுதாரியா வெளிப்படுத்தி இருக்கின்றனர். ‘தபாஹி’ என்ற பாடலின் வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், ஜீ மியூசிக் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது. தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி, ஃபஹீம் அப்துல்லா ஆகியோர் இசை அமைத்துள்ள இப்பாடல், சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுப்பூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது.

இவர், தமிழ் உள்பட 5 மொழிகளிலும் பாடியுள்ளார். இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் ‘மதோஷ்’ (இந்தி), ‘மனமோஹகா’ (கன்னடம்), ‘மனசகதே’ (தெலுங்கு), ‘தடுமாறுதே’ (தமிழ்), ‘மதுமோஹினி’ (மலையாளம்) ஆகிய பெயர்களில் வெளியாகியுள்ளது. பாடல் வரிகளை பிரமோ மரவந்தே (கன்னடம்), அர்ஸ்லான் நிஜாமி – சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு), இயக்குனர் விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர். நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

Tags : Yash ,Tara Sutaria ,Raya ,Rebecca ,Panworld ,Geethu Magandas ,Monster Mind Creations ,KVN Productions ,Zee Music Company ,Tanishq Bagchi ,Arslan Nizami ,
× RELATED மலையாளத்தில் அறிமுகமாகும் மாளவிகா சர்மா