- துர்க் விக்ரம்
- துருவ்
- மைத்ரி மூவி மேக்கர்ஸ்
- கரண் அரவிந்த் குமார்
- பிருத்வி பாண்டியராஜன்
- சாய் தீனா
- ஷாபி
தமிழில் திரைக்கு வந்த ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’, ‘பைசன்: காளமாடன்’ ஆகிய படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். தற்காலிகமாக #MythriTamil04 #DV4 என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகில் மட்டுமின்றி, பிற மொழிகளிலும் படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் 4வது படம் இது. முக்கிய வேடங்களில் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா நடிக்கின்றனர்.
ஷபி, கரண் அரவிந்த் குமார் கதை எழுதியுள்ளனர். விக்கி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது வென்ற விக்ரம் மோர் சண்டை பயிற்சி அளிக்கிறார். ஜெயசூர்யா எடிட்டிங் செய்கிறார். கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி தயாரிக்கின்றனர். ‘பைசன்: காளமாடன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு முற்றிலும் மாஸ் கேரக்டரில் துருவ் விக்ரம் நடிக்கிறார்.
