×

துப்பறியும் திரில்லர் கள வேட்டை

சென்னை: சில படங்கள் வெறும் பொழுதுபோக்காக இருக்கும், ஆனால் சில படங்கள் சமூகம் பெரும்பாலும் புறக்கணிக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர துணிகின்றன. இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘கள வேட்டை’, உண்மைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட அத்தகைய ஒரு துப்பறியும் திரில்லர் என்கிறது படக்குழு.

ஒரு மர்மத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறியும் காவல் அதிகாரியாக நாயகன் வேடத்தில் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் நடிக்கிறார். இது, நீதி, மறைக்கப்பட்ட யதார்த்தங்கள், மற்றும் அனைத்து தடைகளையும் மீறி உண்மையைத் தேடும் கேரக்டராக உருவாகியுள்ளது. நடிகை தன்சிகா நடித்த ஆக்‌ஷன் திரில்லர் ‘யோகிடா’வை இயக்கி பாராட்டு பெற்ற கௌதம் கிருஷ்ணா இப்படத்தை எழுதி இயக்குகிறார். நியூசிலாந்தை சேர்ந்த நடிகை நைகா ஷானு கதாநாயகியாக நடிக்கிறார். இளவரசு, சிங்கம்புலி, சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர். இசை: ஜாவேத் ரியாஸ். படத்தொகுப்பு: ஆர்.கே. வினோத் கண்ணா.

Tags : Chennai ,Emmanuel Arasar ,Dr. ,Samuel George Kalai Arasar ,
× RELATED பவனுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே