×

ராஜமவுலிக்கு ஆறுதல் அளித்த ஜேம்ஸ் கேமரூன்

பான் இந்தியா இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தனது இயக்கத்தில் உருவான ’ஈகா’, ’பாகுபலி 1’, பாகுபலி 2 ’ஆர் ஆர் ஆர்’ ஆகிய படங்களின் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளை பிரெஞ்சு ரசிகர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான புரமோஷன் பணிகளுக்காக அவர் பிரான்ஸ் பாரிஸ் நகரில் இருக்கிறார். அங்குள்ள புகழ்பெற்ற கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தியபோது பேசிய எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘நான் அமெரிக்காவில் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தேன்.

அவரை பார்த்தவுடன் எனது கண்கள் பிரமித்து நின்றன. அவர் எனது ‘ஆர் ஆர் ஆர்’ படத்தை இரண்டு முறை பார்த்ததை பற்றி சொன்னார். அப்படம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது குறித்து பேசினார். நான் அவரை பிரமிப்புடன் பார்த்ததால், என் மனம் எங்கோ செயலிழந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் அச்சத்தை கொடுக்கும் ஒரு தலைப்பான, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்தும் நாங்கள் பேசினோம். ஏஐ ஒருபோதும் திரைப்பட தயாரிப்புக்கு மாற்றாக அமையாது என்று அவர் சொன்னது, உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது’ என்றார்.

Tags : James Cameron ,Rajamouli ,Pan- ,S.S. Rajamouli ,Paris, France ,Grand Rex Theatre ,America ,
× RELATED பிகினி அணிந்தால் என்ன தப்பு..? மாளவிகா மோகனன் பாய்ச்சல்