×

சம்யுக்தா ஒரு புத்திசாலித்தனமான நடிகை: விஜய் சேதுபதி

சென்னை: புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.நாராயணன் ராவ் தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. விஜய் சேதுபதி, துனியா விஜய், சம்யுக்தா மேனன், தபு, விடிவி கணேஷ், பிரம்மாஜி நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைக்க, புரி ஜெகன்நாத் எழுதி இயக்கியுள்ளார்.

சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், ‘எனது முதல் கன்னட படத்தில் நடித்தபோது துனியா விஜய் பற்றி தெரியும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றபோது ஆச்சரியமாக இருந்தது. விடிவி கணேஷுடன் நடிக்கும்போது உஷாராக இருக்க வேண்டும். நடிப்பில் ஓரங்கட்டிவிடுவார். சம்யுக்தா திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும்.

படப்பிடிப்பில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை அமைதியுடனும், உறுதியுடனும் கையாண்ட சார்மி கவுருக்கு பாராட்டு. புரி ஜெகன்நாத் படங்களிலேயே இது மிகவும் தனித்துவம் வாய்ந்தது’ என்றார். சார்மி கவுர் பேசும்போது, ‘கடந்த 2002ல் சிம்புவுடன் ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் நடித்தேன். சென்னை எனக்கு தாய்வீடு மாதிரி. ‘ஸ்லம் டாக்’ மூலம் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறேன். இது நேரடி தமிழ் படம்தான். ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது’ என்றார்.

Tags : Samyuktha ,Vijay Sethupathi ,Chennai ,Puri Jagannath ,Charmi Kaur ,JP Narayanan Rao ,JP Motion Pictures ,Duniya Vijay ,Samyuktha Menon ,Tabu ,VTV Ganesh ,Brahmaji ,Harshavardhan Rameshwar ,
× RELATED சந்தாதாரர்களால் கார் வாங்கிய கவர்ச்சி நடிகை