×

சந்தேகத்தை சவாலாக மாற்றிய ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துள்ள ராஷ்மிகா மந்தனா, திருமணத்துக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்று, இந்தியில் நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘இதுவரை நான் நடித்த ‘புஷ்பா’ 2 பாகங்கள், ‘அனிமல்’, ‘கேர்ள் பிரெண்ட்’ ஆகிய படங்களில் என்னிடம் இருந்து சீரியசான, எமோஷனல் நிறைந்த அல்லது அழுத்தமான நடிப்பை ரசிகர்கள் பார்த்துள்ளனர். ‘காக்டெய்ல் 2’ படத்தில் மிகவும் ஜாலியான நட்பு, காதல், துடிப்பு நிறைந்த கேரக்டரில் நடித்துள்ளேன்.

இதை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள், நான் எடுத்த முடிவு சரியானதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. எனினும், இதுபோல் ஒரு மாடர்ன் கேரக்டரில் இதற்கு முன்பு நான் நடித்தது இல்லை என்பதால், இந்த கேரக்டரை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன். அதோடு, ரசிகர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த நடிகர்களிடம் இருந்து ஏதாவது ஒரு புதிய மாற்றம் அல்லது வித்தியாசத்தை மட்டுமே எதிர்பார்க்கின்றனர் என்பது கூட, இந்த கேரக்டரை நான் தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாகும். வரும் 19ம் தேதி படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Rashmika ,Rashmika Mandanna ,Vijay Deverakonda ,
× RELATED விமர்சனம்: இரட்டையர்