×

ரூ.160 கோடியில் பங்களா கட்டும் பிரபாஸ்

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தேசிய அளவில் பிரபலம் ஆனார். அதன் பின்னர், அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. கடைசியாக இந்த வருடம் பிரபாஸ் நடிப்பில் வந்த ‘ராஜா சாப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து ‘கல்கி 2898 ஏடி : பாகம் 2’, ‘ஸ்பிரிட்’ போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

பிரபாஸ் தற்போது ஐதராபாத்தில் 2 ஏக்கரில் பங்களா கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே 160 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என பல சொகுசு அம்சங்கள் உடன் பிரபாஸ் கட்டி வருகிறாராம். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Tags : Prabas ,Hyderabad ,Pan ,Prabhas ,
× RELATED ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துவிட்டது: கங்கை அமரன் வேதனை