×

டபுள் ஆக்குபன்சி படத்தின் தயாரிப்பாளரானது எப்படி? குஷ்பு மகள் அனந்திதா பதில்

சென்னை: அஸ்​வின் கந்​த​சாமி எழுதி இயக்​கி​யுள்ள படம், ‘டபுள் ஆக்​குபன்​சி’. சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாதன், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பக்ஸ் நடித்​துள்​ளனர். அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பு சுந்தர், பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ்.அருண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சுந்தர்.சி, குஷ்பு தம்பதியின் இளைய மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து அவர் கூறியதாவது: காதல், கற்​பனை, அடை​யாளம் குறித்த சமகால சிந்​தனை​களை உள்​ளடக்​கிய படமான இது, வழக்கமான தமிழ் படங்களின் கதைசொல்லல் எல்​லைகளை தாண்டி ரசிகர்களுக்கு புது அனுபவத்​தை கொடுக்கும். எனது சகோதரி அவந்திகா, ‘ஆரம்பம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தமிழில் 2 படங்களில் நடிக்கிறார். சிறுவயதில் இருந்தே எனது பெற்றோர்களை பார்த்து வளர்ந்ததால், திரைப்படம் சம்பந்தமான விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான நான், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களில் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர துறையில் பணியாற்றுகிறேன். முன்னதாக, இயக்குனர் மணிரத்னம் டீமில் பணியாற்றினேன்.

Tags : Khushbu ,Ananthitha ,Chennai ,Ashwin Kandaswamy ,Sandosh ,Samyuktha Viswanathan ,Reshma Venkatesh ,Vinod Kishan ,VTV Ganesh ,Bucks ,Khushbu Sundar ,Avni Movies ,ACS ,Arun Kumar ,Benz Media ,Shanthakumar Chakravarthy ,Sam CS ,Ananthitha Sundar ,Sundar.C ,
× RELATED ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துவிட்டது: கங்கை அமரன் வேதனை