- வட சென்னை
- மாஸ்டர் மகேந்திரன்
- காத்தல் குமார்
- ஜீவா தங்கவேல்
- சாஹிபா பாஷின்
- சேலம் வெங்கை அய்யனார்
- பிரேம்நாத்
- கிமாயா
- நான் கடவுள்
- ராஜேந்திரன்
- வில்லியம்ஸ்
வட சென்னை இளைஞன் மாஸ்டர் மகேந்திரன், மற்றவர்களின் காதலுக்கு பாலமாக இருப்பதால், ‘காதல் குமார்’ என்று அழைக்கப்படுகிறார். அவரால் தனது காதலில் வெற்றிபெற முடியவில்லை. அதன் பிறகு நடப்பது மீதி கதை. வித்தியாசமான கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் யதார்த்தமாக நடித்துள்ளார். காமெடியை தவிர்த்து, வில்லன் வேடத்தில் ஜீவா தங்கவேல் மிரட்டியுள்ளார். சஹிபா பாஷின் அழகிலும், நடிப்பிலும் கவனத்தை ஈர்க்கிறார்.
சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், கிமாயா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நன்கு நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் நேர்த்தியாக படமாக்கியுள்ளார். அச்சு ராஜாமணி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஈர்க்கிறது. எடிட்டர் கிரேசன், ஆர்ட் டைரக்டர் பி.எல்.தேவா பணிகள் குறிப்பிடத்தக்கது. விஜய் அவதார் எழுதி இயக்கியுள்ளார். பேராசையால் ஏற்படும் விளைவுகள் குறித்து நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறார். முதலை பண்ணை காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

