- அபிராமி
- ப்ரீத்தி முகுந்தன்
- அர்ஜுன்
- பிரதீப் ரங்கநாதன்
- சுபாஷ் கே. ராஜ்
- ஏஜிஎஸ் என்டர்ட
- ஜான் கொக்கன்
- அர்ஜுன் சிதம்பரம்
- பவன்
- பாலா ஹாசன்
- வினோத் சாகர்
- ரவி பஸ்ரூர்
- அருண் ராதாகிருஷ்ணன்
- வீரமணி கணேசன்
- கல்பாத்தி எஸ். அகோரம்
- எஸ். கணேஷ்
- எஸ்.சுரேஷ்
- அர்ச்சனா கல்பதி
- ஐஸ்வர்யா கல்பாத்தி

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன் உதவியாளர் சுபாஷ் கே.ராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘பிளாஸ்ட்’. அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஜான் கொக்கன், அர்ஜூன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைக்க, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கணேசன் அரங்கம் அமைத்துள்ளார். கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படம் குறித்து அர்ஜூன் கூறியதாவது: 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள நான், இதில் முதல்முறையாக கராத்தே மாஸ்டராக நடித்துள்ளேன். இங்குள்ள இளம் திறமைசாலிகளிடம் இருந்து நிறைய புது விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் அபிராமியும், பிரீத்தி முகுந்தனும் சண்டை காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்ததை பார்த்து, ஆக்ஷன் கிங் என்று சொல்லப்படும் நானே பயந்துவிட்டேன். எங்கே அவர்கள் என்னை ஓவர்டேக் செய்துவிடுவார்களோ என்று உண்மையிலேயே நடுக்கம் ஏற்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் பிரபுவின் கடின உழைப்புக்கு பாராட்டுகள்.

