தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ என்கிற ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். தற்போது நாக சைதன்யா ஜோடியாக ‘விருஷகர்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தவிர, 2 புதிய இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி கூறுகையில், ‘எப்போதுமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டேன். எங்கேயும், எப்போதும் ஒளிவுமறைவு இல்லாமல் பேசவும், பழகவும் என்னை தயார்ப்படுத்தி இருக்கிறேன். இதனால் பல்வேறு கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால், எனது குணத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், கேமராவுக்கு பின்னால் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.
