×

கீர்த்தியை மூழ்க வைத்த கேரக்டர்

மறைந்த நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான சாவித்​திரி​யின் வாழ்க்கை சம்பவங்களை மைய​மாக வைத்​து, தெலுங்கில் நாக் அஸ்​வின் எழுதி இயக்​கிய படம், ‘மகாநடி’. தமிழில் இது ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. சாவித்​திரி​ வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இதில் துல்​கர் சல்​மான், ராஷ்மிகா மந்​த​னா, விஜய் தேவர​கொண்டா நடித்​திருந்தனர். இப்படம் திரைக்கு வந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து அவர் கூறுகையில், ‘என் இதயத்துக்கு மிகவும் நெருக்​க​மான படம் என்​றால், கண்டிப்பாக அது ‘மகாநடி’ படமாகத்​தான் இருக்​கும். இதில் மிக​வும் வித்​தி​யாச​மான கேரக்டரில் நடித்தேன். அதில் என்னை முழு​மை​யாக ஈடு​படுத்​திக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. மிகவும் உணர்வுப்​பூர்​வ​மாக​வும், மனதள​விலும் என்னை அந்த கேரக்டருக்காக அர்ப்​பணித்​தேன். ஒருகட்​டத்​தில் ஆழமாக அந்த க​தா​பாத்​திரத்​தில் மூழ்​கி, கடைசியில் என்​னையே அதில் தொலைத்​து​விட்​டேன்’ என்​றார்.

Tags : Keerthy ,Savithri ,Nag Ashwin ,Keerthy Suresh ,Dulquer Salmaan ,Rashmika Mandanna ,Vijay Deverakonda ,
× RELATED அமானுஷ்ய கேரக்டரில் நடிக்கும் தமன்னா