சென்னை: இந்தி நடிகர் ரோஹன் மெஹ்ராவை பூஜா ஹெக்டே தீவிரமாக காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்தி சினிமாவின் மாஜி ஹீரோ வினோத் மெஹ்ரா. இவரது மறைவுக்கு பிறகு இவரின் மகன் ரோஹன் மெஹ்ரா இந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ரோஹன் மெஹ்ரா, ஏற்கனவே ரியா சர்மா என்ற நடிகையை காதலித்தார். கருத்து வேறுபாடால் இவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இவரும் பூஜா ஹெக்டேவும் காதலிப்பதாக சொல்லப்படுகிறது. பல இடங்களுக்கு இவர்கள் ஜோடியாக சென்று வந்த புகைப்படங்கள், இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், பூஜாவுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா? தோல்விப் பட நடிகரை பிடித்திருக்கிறார். அவர் பல பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றெல்லாம் கமென்ட் செய்து வருகிறார்கள். இந்த காதல் செய்திகள் குறித்து பூஜா ஹெக்டேவோ, ரோஹன் மெஹ்ராவோ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
