×

சென்னையில் இன்று சன் டி.வி.யின் சிறப்புப் பட்டிமன்றம்: அனுமதி இலவசம்

சென்னை: உலகம் முழுவதும் சன் டிவி நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சிறப்புப் பட்டிமன்றம் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற உள்ளது. பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பட்டிமன்றத்தில் 6 பெண் பேச்சாளர்கள் இரு அணிகளாக பங்கேற்று, வாதங்களை முன்வைக்க உள்ளனர். சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் பின்புறத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (ஏப்ரல் 30 வியாழக்கிழமை) மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த மகளிர் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்ச்சியை சன் டிவி நேயர்கள் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம். இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற உள்ள இந்த சிறப்புப் பட்டிமன்றம், வரும் மே 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினத்தன்று சன் டிவி யில் ஒளிபரப்பாக உள்ளது.

நாள் 30-4-2026 (வியாழக்கிழமை)
இடம் கலைஞர் அரங்கம் (அண்ணா அறிவாலயம் பின்புறம்,
தேனாம்பேட்டை, சென்னை
நேரம் மாலை 6:30 மணி
அனுமதி இலவசம்

Tags : Sun TV ,Chennai ,Mother's Day ,Bharathi Bhaskar ,Kalaignar Arangam ,Anna Arivalayam ,Teynampet ,
× RELATED முருகன் பற்றிய இசை ஆல்பம்