×

முருகன் பற்றிய இசை ஆல்பம்

சென்னை: தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய பாடல் ஆல்பம் உருவாகி வருகிறது. சூரஜ் குமார் புரொடக்ஷன்ஸ் சார்பில், நடிகர் சூரஜ் குமார் நடித்து இந்தப் பக்திப் பாடலைத் தயாரிக்கிறார். இவருடன் எஸ்4 ஸ்டுடியோஸ் சார்பில் சதிஷ் குமார் .சி இந்த ஆல்பத்தை இணைந்து தயாரிக்கிறார். இப்பாடலை விஜய் கிரண் இயக்குவதோடு, ஓளிப்பதிவும் செய்திருக்கிறார்.

சென்னை. மற்றும் வேலூரில் இந்த தமிழ்கடவுள் பாடலுக்குப் படப்பதிவு செய்து வருகின்றனர். சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவான இந்தப் பாடல், காலம் கடந்தும் பேசப்படும் முருகப்பெருமான் பாடல்கள் வரிசையில் சேரும் என்கின்றனர் படக்குழுவினர். காதல் பாடல்கள் ஏராளம் வெளியாகும் நிலையில், கந்தன் புகழ்பாடும் முருகன் பக்திப் பாடலை குழுவினர் தயாரித்து வருகின்றனர். குறும்படங்களில் நடித்துள்ள சூரஜ் குமார், விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

Tags : Suraj Kumar Productions ,Suraj Kumar ,Satish Kumar ,S4 Studios ,Vijay Kiran ,Chennai ,Vellore ,Sanjay Manikam ,
× RELATED கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ்...