×

பால் உடம்பு என வர்ணித்த விவகாரம்: தமன்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்; 71 வயது நடிகர் கதறல்

மும்பை: பால் உடம்பு என வர்ணித்த விவகாரத்தில் தமன்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக பாலிவுட் நடிகர் அன்னு கபூர் கூறினார். ‘ஸ்த்ரி 2’ இந்தி படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் தமன்னா. அந்த பாடலை பார்த்த 71 வயதான அன்னு கபூர், தமன்னாவுக்கு பால் உடம்பு. அதில் நான் சொக்கிப்போனேன் என வர்ணித்தார். இது பெரும் எதிர்ப்பை ரசிகர்களிடமும் பெண்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. இது பற்றி தமன்னா எதுவும் கருத்து கூறவில்லை. ஆனால் பலரும் அன்னு கபூரை திட்டித் தீர்த்தனர். ‘உங்க மகள் வயதான ஒருவரைப் பற்றி இப்படியா பேசுவது’ என கடிந்தனர். இதனால் கடந்த சில மாதமாக பொது இடங்களுக்கு அன்னு கபூர் வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, மீடியாவினர் அவரை சூழ்ந்து கொண்டு இது பற்றி கேட்டனர்.

அப்போது அன்னு கபூர் கூறும்போது, ‘‘அந்த வார்த்தையை நான் ஆங்கிலத்தில் மில்க் பியூட்டி என கூறியிருந்தால் இவ்வளவு சர்ச்சை ஆகியிருக்காது. இந்தியில் சொன்னதால் தவறாகிவிட்டது. ஆனால் எந்த தவறான நோக்கத்துடனும் அதை நான் கூறவில்லை. மர்சிடீஸ் காரை பார்த்து, அழகாக இருக்கிறது. அதன் அழகில் நான் சொக்கிப்போனேன் என சொல்வதால், அதை நான் வாங்கத் துடிக்கிறேன். அந்த காரை பயன்படுத்த விரும்புகிறேன் என அர்த்தம் கிடையாது. அதுபோலத்தான் இதுவும். ஆனாலும் எனது கருத்து, தமன்னாவுக்கு வருத்தம் கொடுத்திருந்தால் அதற்காக அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்’’ என்றார்.

Tags : Tamannaah ,Mumbai ,Bollywood ,Annu Kapoor ,
× RELATED கவர்ச்சியை ஆதரிக்கும் ரைசா வில்சன்