×

கிரித்தி உதிர்த்த திடீர் தத்துவம்

 

பாலிவுட் முன்னணி நடிகை கிரித்தி சனோன், இந்தியில் ஷாகித் கபூர் ஜோடியாக ‘காக்டெய்ல் 2’ என்ற படத்தில் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கிரித்தி சனோன் பேசுகையில், ‘எல்லா பிரச்னைகளுக்கும் நான் சொல்லும் ஒரே விஷயம், ‘இட்ஸ் ஓ.கே. அடுத்து என்ன?’ என்பதுதான்.

பிரச்னைகளை கடந்து, தீர்வை நோக்கி செல்ல வேண்டும். இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர முடியாது. வாழ்க்கை என்பது மிகப்பெரிய புதிர்கள் கொண்ட பயணம். அதை எதிர்கொண்டு, புதிரை விடுவித்து சென்றால் கண்டிப்பாக தப்பிக்கலாம்’ என்று, திடீர் தத்துவத்தை உதிர்த்தார்.

Tags : Bollywood ,Kriti Sanon ,Shakit Kapoor ,Rashmika Mandana ,
× RELATED ஐஸ்வர்யாவை காதலிக்க வைத்தது எப்படி?