×

நேரில் அணுக முடியாத நட்டி

நடிகர் உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி நடித்துள்ள படம், ‘டிஎன் 2026 தங்க நட்சத்திரம்’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ளது. நடிகரும் இயக்குனருமான தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ‘கும்கி 2’ ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா ேராபோ சங்கர், ஆதித்யா கதிர், ஜாவா சுந்தரேசன் நடித்துள்ளனர். அரசியல் திரில்லர் படமான இது, வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. நட்டி கூறுகையில், ‘இன்னும் சில ஆண்டுகளில் உமாபதி ராமய்யா, பான் இந்தியா இயக்குனர்களில் ஒருவராக புகழ்பெறுவார்.

தேசிய விருது பெற்ற தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து நடித்தபோது, நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் யாரையும் தாக்கி உருவாக்கப்படவில்லை. குறிப்பிட்ட நடிகரின் லுக் ஒரு போர்ஷனில் மட்டுமே வரும். மேலும் சில வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்துள்ளேன். யாரையும் அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது’ என்றார். படக்குழுவை தாக்கி சோஷியல் மீடியாவில் வெளியாகி வரும் கடுமையான விமர்சனங்களை தடுக்க வேண்டும் என்று, குறிப்பிட்ட நடிகரை நேரில் சந்தித்து பேசுவீர்களா என்று நட்டியிடம் கேட்டபோது, ‘அந்த நடிகரை நேரடியாக அணுகி பேசுவது என்பது இப்போது சாத்தியம் இல்லை. அந்த தரப்பினருக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், அவர்களாக என்னை அழைத்தால், நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Tags : Natty ,Umapathi Ramaiah ,Kannan Ravi Groups ,Darpuka Siva ,Thambi Ramaiah ,M.S. Bhaskar ,Ilavarasu ,Kumki 2 ,Shritha Rao ,Chandini Tamilarasan ,Yashika Anand ,Redin Kingsley ,Indraja Yerabo Shankar ,Aditya Kathir ,Java Sundaresan ,
× RELATED ஹாலிவுட்டுக்கு சென்ற சன்னி லியோன்