- மாலவிகா மனோஜ்
- மீரா கத்ரவன்
- ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்
- கஸ்தூரி ராஜா
- சாம் சி. எஸ்
- மீரா கத்ரவன்
- நிலோபர் நிஷா
திரைக்கு வந்த ‘ஜோ’, ‘ஆண் பாவம் பொல்லாதது’ ஆகிய படங்களின் வெற்றியால் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர், மலையாள நடிகை மாளவிகா மனோஜ். தற்போது மீரா கதிரவன் இயக்கத்தில் ‘ஹபீபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், ‘இதில் நிலோஃபர் நிஷா என்ற கேரக்டரில் மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். அனைத்து கேரக்டர்களும் அவரை அன்புடன் ‘நிலா பொண்ணு’ என்று செல்லமாக அழைப்பார்கள்.
நான் கதை எழுதும்போது, கடந்த 1990களில் வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டு காலக்கட்டங்களில், மாறுபட்ட தோற்றத்துடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 250க்கும் மேற்பட்ட நடிகைகளை ஆடிஷன் செய்து, இறுதியில் மாளவிகா மனோஜை பார்த்தவுடன், இவர்தான் பொருத்தமான தேர்வு என்று நம்பினேன். இந்த ரோலுக்கு கண்களின் மூலமே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேவைப்பட்டார். அவருக்கு அதிக வசனங்கள் இருக்காது. முகபாவனைகள், உடல்மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்தினார். அதை மிகவும் திறமையாக கையாண்டு ஆச்சரியப்படுத்தினார்’ என்றார்.
