×

வைரலான ஹீரோயின்களின் கோயில் போட்டோக்கள்

இந்தி டி.வி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா மோத்வானி, பிறகு இந்தி படங்களில் நடித்தார். நன்கு வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, பிறகு தென்னிந்திய படவுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, நம்பர் ஒன் நடிகைகளின் பட்டியலில் இணைந்தார். கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் கேட்டு தனது மார்க்கெட்டை தானே கெடுத்துக்கொண்ட அவர், சிம்புவின் காதல் வலையில் சிக்கி புதுப்பட வாய்ப்புகளை இழந்தார்.

கடந்த 2022ல் சோஹைல் கதூரியா என்பவரை காதல் திருமணம் செய்த பிறகு மும்பையில் வசித்து வந்த அவர், தனது தோழியின் முன்னாள் கணவர் சோஹைல் கதூரியா என்ற விஷயத்தை மறைத்துவிட்டார். எனினும் அந்த ரகசியத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள், அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். ஹன்சிகா மோத்வானியின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த அவர், தனக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதுபோல், தனுஷுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், கோயிலில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இரு முன்னணி ஹீரோயின்கள், திடீரென்று கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Hansika Motwani ,Simbu ,Sohail Khaduria ,
× RELATED நோராவின் ஆபாச நடனத்தால் சர்ச்சை;...