×

வெப் தொடர்களில் நடிக்க நடிகர்களுக்கு தடை

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில் நேற்று அவரச ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கமலக்கண்ணன், இணைச்செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் என்.சுபாஷ் சந்திர போஸ், வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் ஆகிய பலர் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் குறிப்பாக, திரைப்படங்கள் வெளியீட்டிற்கும், ஓடிடி வெளியீட்டை முறைப்படுத்துவதற்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைப்பது, நடிகர், நடிகையர், இயக்குனர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் எந்த ஒரு தயாரிப்பாளரிடம் முதலில் அட்வான்ஸ் வாங்குகிறார்களோ அந்த தயாரிப்பாளருக்கு முன்னுரிமை கொடுத்து திரைப்படத்தினை முடித்து தர வேண்டும் என்றும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகை, இயக்குனர், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள், வெப் தொடர்களில் நடிக்கவோ, இயக்கவோ கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்படி செல்பவர்கள் திரைப்படங்களில் பணிபுரிய கூட்டுக்குழு எடுக்கும் முடிவிற்கு ஏகமனதாக கட்டுபட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இனி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Film Producers Association ,G.K.M. Tamilkumaran ,S. Kathiresan ,R. Radhakrishnan ,vice-president ,Kamalakannan ,Sujatha Vijayakumar ,N. Subhash Chandra Bose ,
× RELATED அஜித்துக்கு ரூ.30 லட்சம் கார் பரிசு