×

என் படத்துக்கு பிசினஸ் இல்லை என்றார்கள்: ஆரி உருக்கம்

சென்னை: மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரிக்க, ‘தீர்க்கதரிசி’ எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்பிரமணியம் சிவா, தலைவாசல் விஜய் நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘4த் ஃப்ளோர்’. ஜே.லஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசை அமைத்துள்ளார். செவன்த் ஸ்டுடியோ கே.கண்ணன் வெளியிடுகிறார். யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து ஆரி கூறுகையில், ‘சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல. அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும். டி.வி நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு சரியாக அமையவில்லை. ஆரி படங்களில் நடிப்பதில்லை, அவருக்கு என்ன பிசினஸ் இருக்கிறது என்று பலர் சொன்னபோது, அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை வைத்து தயாரித்த ராஜாவுக்கு நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் சண்டை போட்டுள்ளோம். அது, படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்குத்தான். இங்கு வெற்றிதான் எல்லோரையும் முன்னிறுத்துகிறது. வெற்றிபெற்றால் எல்லோருமே ஸ்டார்தான். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என்று உண்மையிலேயே தெரியாது. உண்மையான உழைப்பை வழங்கியிருக்கிறேன்’ என்றார்.

Tags : Chennai ,A. Raja ,Mano Creation ,LR Sundarapandi ,Aari Arjunan ,Deepshika ,Pavithra ,Subramaniam Siva ,Thalaivasal Vijay ,J. Lakshman ,Taran Kumar ,Seventh Studio ,K. Kannan ,Aari ,
× RELATED டோலிவுட்டுக்கு வரும் பாலிவுட் நடிகைகள்