×

மம்தா மோகன்தாஸ் திடீர் உருக்கம்

நடிகையும், பாடகியுமான மம்தா மோகன்தாஸ், தனது புற்றுநோய் பாதிப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘எனது 24வது வயதில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 27 மற்றும் 28வது வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனது கருமுட்டைகளை உறைய வைப்பது பற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. டாக்டர்களுக்கு தெரியும் என்றாலும், அவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. சிகிச்சை முடிந்த பிறகு அவர்களிடம் கேட்டேன். நீங்கள் எங்களிடம் கேட்காததால் நாங்கள் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்? அந்த டாக்டர்கள் அமெரிக்காவில் படித்தவர்கள்.

உடனே நான் எல்லா டாக்டர்களையும் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். அறுவை சிகிச்சையின் போது 30 அல்லது 35 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். நான் நர்சுகளுக்கு சொல்வது என்னவென்றால், நீங்கள் நோயாளிகளின் அறைக்கு வரும்போது, குறைந்தபட்சம் ஒரு சிறிய புன்னகையாவது வெளிப்படுத்துங்கள். அது அந்த நோயாளிகளுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவு கொடுக்க சிலர் வந்தனர். எனக்கு அருகிலேயே இருந்த அவர்கள் அழவில்லை. அதற்கு மாறாக, என்னை அதிகமாக உற்சாகப்படுத்த ஜோக் சொன்னார்கள்’ என்றார்.

Tags : Mamta Mohandas' ,Mamta Mohandas ,
× RELATED ஸ்வீட்டி நாட்டி கிரேசி விமர்சனம்…