×

வைரலான பூஜா ஹெக்டே வாட்ச்: எவ்வளவு லட்சம் தெரியுமா?

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பூஜா ஹெக்டே அணிந்து வந்த வாட்ச் கவனத்தை ஈர்க்கவே, அதைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு பூஜா ஹெக்டே உயர்ரக வாட்ச் ஒன்றை அணிந்து வந்திருந்தார். புகைப்படங்களில் அந்த வாட்ச்சை பார்த்த ரசிகர்கள், அது ரோலாக்ஸ் வாட்ச் என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

அதைப் பற்றி அவர்கள் தேடியபோது, ரோலாக்ஸ் டேட் ஜஸ்ட் மாடல் வாட்ச் என்பதும் இதன் விலை ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் என்றும் தெரிந்தது. இந்த விலையை போட்டு பூஜா ஹெக்டே அணிந்த உயர்ரக வாட்ச் என்றும் தொடர் தோல்வி படங்கள் தரும் பூஜாவுக்கு இந்த ஆடம்பரம் தேவையா என்றும் சிலர் கடுமையாக விமர்சித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

Tags : Pooja Hegde ,Chennai ,Mumbai ,Rolex ,
× RELATED காதலர் தினம்: ரீ-ரிலீசாகும் 4 படங்கள்