×

ஒரு படம்: மூன்று காதல்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற காமெடி படம், வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஷூவல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரிக்க, ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார். தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவரும், தமிழில் ‘தங்கமகன்’, ‘டெவில்’, ‘கடாவர்’ ஆகிய படங்களில் நடித்தவருமான திரிகுண் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மற்றும் ரவிமரியா, தம்பி ராமய்யா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாப், தனசேகர், வினோத் ஆகியோருடன் தெலுங்கு நடிகர்கள் ஆலி, ரகுபாபு நடித்துள்ளனர். சி.விஜயஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, அருணகிரி இசை அமைத்துள்ளார். கே.குமார் எடிட்டிங் செய்ய, ஜெயகுமார் அரங்கம் அமைத்துள்ளார். சினேகன், பாஸ்கர் எஸ்.தேவ் பாடல்கள் எழுதியுள்ளனர். ஐ.ராதிகா நடனப் பயிற்சி அளித்துள்ளார். இப்படம் மூன்று விதமான காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், கோவை, கோத்தகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Tags : Kovai Ramesh ,Arun Visuals ,Rajasekhar ,G. Trigun ,Sreejeetha Ghosh ,Iniya ,Radha ,Ravi Maria ,Thambi Ramaiah ,Sathyan ,Java Sundaresan ,Madanbab ,Dhanasekar ,Vinoth ,
× RELATED கல்லூரி நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக...