×

பாடி அசத்திய சைத்ரா

சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ள ‘மை லார்ட்’ என்ற படம், வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ளார். அம்பேத்குமார் வழங்கும் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் வெளியிடுகிறது. கன்னட நடிகையான சைத்ரா ஜே.ஆச்சார், தமிழில் ‘3 பிஹெச்கே’ என்ற படத்துக்கு பிறகு இதில் நடித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘தமிழ் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் சரளமாக பேச கற்றுக்கொண்டேன். ராஜூ முருகன் எனக்கு அளித்த நம்பிக்கையும், ஆதரவும்தான் இதில் கோவில்பட்டி பெண்ணாக நான் மாற முக்கிய காரணமாகும். முன்னணி இயக்குனர், நடிகர் என்ற பந்தா இல்லாதவர் சசிகுமார். நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். இப்படத்தில் நடித்த அனுபவத்தை வாழ்நாளில் மறக்க முடியாது’ என்றார். பிறகு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை அற்புதமாக பாடினார். ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், மம்தா மோகன்தாஸ், ராசி கன்னா, அதிதி ராவ் ஹைதாரி, அதிதி ஷங்கர் போல், சொந்தக்குரலில் பாடும் திறமையை சைத்ரா ேஜ.ஆச்சார் பெற்றுள்ளார்.

Tags : Sasikumar ,Chaitra J. Achar ,Jayaprakash ,Guru Somasundaram ,Asha Sarath ,Gopi Nainar ,Vasumithra ,Niravsha ,Yugabharathi ,Sean Roldan ,Raju Murugan ,Jayanthi Ambedkumar ,Olympia Movies ,Ambedkumar ,Srikumaran Films ,Tamil Nadu ,
× RELATED ஊதாரி கதையில் ஜனனி