×

அண்ணனால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம்

சண்டைக்கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், பொன்னம்பலம். 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ள அவர், சொந்த படம் தயாரித்து இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள அவர், பணம் இல்லாததால் நிதியுதவி கேட்டு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் சினிமாவில் நடித்து பிரபலமானதில் என் அண்ணனுக்கு விருப்பம் இல்லை. என்மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் வீட்டு வாசலில் பில்லி சூனியம் வைப்பதற்காக பள்ளத்தை தோண்டினார். நான் வெளியில் சென்று பார்த்தபோது அந்த உண்மை தெரிந்தது.

என் உதவியாளரை மிரட்டி பில்லி சூனியம் வைக்க சொன்னதுடன், நான் சாப்பிடும் ரசத்தில் ஒரு பொடியை கலந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். எனது பிறந்தநாள் அன்று பீர் வாங்கி வந்தார். அதில், ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துவிட்டார். அதை குடித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் எனது உடல் மோசமாகி ஒல்லியானேன். பிறகு எனது கிட்னி பாதிக்கப்பட்டது. பீரில் குதிரை முடியை பொடி செய்து கலந்திருக்கிறார். அது வயிற்றுப்பகுதியில் சென்று ஒட்டிக்கொண்டதால், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எனது உடல்நிலை மோசமடைந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டேன்’ என்றபடி கண்கலங்கினார். அவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Tags : Ponnambalam ,
× RELATED கல்யாணியை காப்பியடித்த அமலா பால்