×

பிரியா வாரியரை மிரட்டிய தயாரிப்பாளர்: பகீர் தகவல்

சென்னை: ஒரே ஒரு கண்ணடிக்கும் வீடியோ வைரல் ஆனதால் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இருப்பினும் படங்களில் அவருக்கு தொடர்நது பெரிய ரோல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சின்ன சின்ன ரோல்களில் தான் தற்போது நடித்து வருகிறார். அஜித்தின் ‘குட் பேட் அக்லீ’ படத்தில் அவர் ஒரு பாடலில் கிளாமர் ஆக ஆடி வைரல் ஆகி இருந்தார்.

அதன் பின் ‘சர்வம் மாயா’ படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தார். ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து இருந்த ‘பரம்சுந்தரி’ என்ற இந்தி படத்தில் பிரியா வாரியர் ஒரு காட்சியில் மட்டும் இருப்பது, தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அவரை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், பேக்ரவுண்ட் என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஒரு நாள் மட்டுமே தான் கலந்துகொண்டதாகவும், ஆனால் தன் ரோல் சொன்னபடி இல்லை என கூறி அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறி இருக்கிறார். அவர் நடிக்க வரவில்லை என்றால், முதல் நாளில் அவர் நடித்ததை படத்தில் பயன்படுத்துவோம் என தயாரிப்பு தரப்பு நடிகையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் பற்றி மிக கோபமாக பிரியா வாரியர் பதிவிட்டு இருக்கிறார். ‘‘க்ளிக்ஸ் பெறுவதற்காக மோசமாக செய்கிறார்கள்’’ என குறிப்பிட்டு அவர் தாக்கி இருக்கிறார்.

Tags : Priya Varrier ,Chennai ,India ,Ajith ,
× RELATED கவர்ச்சி இல்லாத கயாடு லோஹர்