×

ஓடிடியில் வெளியாகும் ஜி.வி படம்

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்ச்சியில், முதல்முறையாக ‘லக்கி’ என்ற படத்தின் தனியுலகம் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்க அப்பாவி போல் தோன்றும் ஒரு நாய்க்குட்டி, அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும்போது ஏற்படும் குழப்பங்கள்தான் மையக்கரு. உதய் மகேஷ் எழுதி இயக்கியுள்ள இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடித்துள்ளனர்.

வரும் 20ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது. குடும்பங்கள், இளைஞர்கள், செல்லப்பிராணி பிரியர்கள் போன்றவர்களை கவரும் படமாக ‘லக்கி’ இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : GV ,Jio Hotstar South Unbound event ,Uday Mahesh ,Prakash Kumar ,Anaswara Rajan ,Devadarshini ,Jio Hotstar ,
× RELATED கவர்ச்சி இல்லாத கயாடு லோஹர்