×

லீடர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்​கு​கிறார். இவர், ‘எதிர்​நீச்​சல்’, ‘காக்கி சட்​டை’, ‘கொடி’, ‘பட்​டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர். இதில் பாயல் ராஜ்புத் நாயகி​யாக நடிக்​கிறார்.

ஷாம், ஆண்ட்​ரி​யா, பாகுபலி பிர​பாகர், சந்​தோஷ் பிர​தாப் உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர், ஜிப்​ரான் இசையமைக்​கிறார். எஸ்​.வெங்​கடேஷ் ஒளிப்​ப​திவு செய்​கிறார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்​கும் இப்படத்​துக்கு ‘லீடர்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதன் டைட்​டில் அறி​முக விழா சென்​னை​யில் நேற்று நடந்தது.

Tags : Chennai ,Legend Saravanan ,JD-Jerry ,Durai Senthilkumar ,Payal Rajput ,Sham ,Andrea ,Bahubali Prabhakar ,Sandosh Pratap Ablidor ,Ghibran ,S. Venkatesh ,Saravanan ,
× RELATED கவர்ச்சி இல்லாத கயாடு லோஹர்