×

‘அன்பே டயானா’ டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பில் யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ என்ற படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. ‘ஜமா’ பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். தவிர, முன்னாள் ஹீரோயின் ரோஜா, சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசை அமைக்க, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் அரங்குகள் அமைக்க, பார்த்தா எடிட்டிங் செய்துள்ளார். மோகன் ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் பாடல்கள் எழுதியுள்ளனர். சென்னையிலுள்ள பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

Tags : Yuvaraj Ganesan ,Sathya Karikalan ,Million Dollar Studios ,Neo Castle Creations ,Jama' Pari Ilavazhagan ,Ramya Ranganathan ,Dhanush ,Roja ,Chethan ,Paritaphangal' Gopi ,Ismat Banu ,
× RELATED வாழை 6 பாகம் இயக்க தனி குழு உருவாக்கிய மாரி செல்வராஜ்