×

விமர்சனம் நன்றாக இருந்தால்தான் படம் பார்க்க வருகிறார்கள்: கே.பாக்யராஜ் பேச்சு

 

சென்னை: ஆஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிக்க, சந்தோஷ் ரயான் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. இதில் ஆஷிகா அசோகன், சான்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பெராடி, நிழல்கள் ரவி நடித்துள்ளனர். வீரமணி ஒளிப்பதிவு செய்ய, கவுதம் வின்சென்ட் இசை அமைத்துள்ளார். சந்தீப் நந்தகுமார் எடிட்டிங் செய்ய, பாலாஜி அரங்கம் அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில், ‘மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தால்தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்கின்றனர். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத சந்தோஷ் ரயான் தெளிவாக கதை சொன்னவிதத்திலேயே அவரது திறமை தெரிந்தது. எனக்கு கிரைம் சப்ஜெக்ட் மிகவும் பிடிக்கும். நான் அதிகமாக கிரைம் கலந்த ஆக்‌ஷன் படங்களை பார்ப்பேன். படத்தில் யார் நடித்திருப்பது என்பதை விட, கதை என்ன என்பதே முக்கியம். இப்போது ரசிகர்கள், விமர்சனம் நன்றாக இருந்தால் மட்டுமே படம் பார்க்கலாம் என்று நினைக்கின்றனர். சிறுபட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுக்க முன்வர வேண்டும்’ என்றார்.

Tags : K. Bhagyaraj ,Santosh Ryan ,Syed Thameen ,Ashna Creations ,Ashika Ashokan ,Sandra Anil ,Aishwarya ,Sinan ,Bittu Thomas ,Rekha ,Harish Peradi ,Nizhalgal Ravi ,Veeramani ,Gautham Vincent ,Sandeep Nandakumar ,Balaji Arangam ,
× RELATED செல்ஃபி எடுப்பவர்களுக்கு அஜித் வேண்டுகோள்