×

வாழ்க்கையில் ரொம்பவே அடிவாங்கி இருக்கிறேன்: சிம்பு

 

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ என்ற படத்தில் புதிய கெட்டப்பில் நடித்து வரும் சிம்பு, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய கருத்து வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘எங்கே சென்றாலும் என்னை பார்ப்பவர்கள், எப்போது எனது திருமணம் என்று கேட்கிறார்கள். திருமணம் என்பது நடக்கும்போது நடக்கும். தனியாக இருப்பதோ அல்லது குடும்பமாக இருப்பதோ ஒரு மேட்டரே கிடையாது.

நாம் ஒழுங்காகவும், நிம்மதியாகவும் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். சந்தோஷமான மனதுடன் இருந்தாலே போதும். ஒருசிலரை நிம்மதியாக பார்த்துக்கொள்ள முடிந்தாலே போதும். என்னடா இவன் தத்துவம் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். வாழ்க்கை யில் ரொம்பவே அடிவாங்கி இருப்பதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறேன்’ என்றார்.

 

Tags : Simbu ,Chennai ,Vetrimaaran ,
× RELATED செல்ஃபி எடுப்பவர்களுக்கு அஜித் வேண்டுகோள்