சென்னை: பிரபல நடிகை நிவேதா பெத்து ராஜ், துபாய் தொழிலதிபரை காதல் திருமணம் செய்ய இருப்பதாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவித்தார். அவர்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் என்றும், திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை முதல் தகவல் பரவி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராமில் ராஜித் இப்ரானுடன் இருந்த போட்டோக்களை நிவேதா பெத்துராஜ் நீக்கியுள்ளார். அதுபோல், ராஜித் இப்ரானும் நிவேதா பெத்து ராஜுடன் இருந்த போட்டோக்களை நீக்கியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ‘அன்ஃபாலோ’ செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், திருமணம் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
