×

கீர்த்தி கொடுத்த டிப்ஸ்

திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், நாள்தோறும் சோஷியல் மீடியாவில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களும், வீடியோக்களும் இணையதளங்களில் அதிவேகமாக பகிரப்படுகின்றன. தற்போது உடல் எடை குறைந்து காணப்படும் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘நான் குண்டாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்தேன் என்று சொல்வார்கள்.

அப்போது 10 தோசை, 10 இட்லி சாப்பிடுவது போல் இருந்தது. சில உடற்பயிற்சிகளை செய்தேன். பிறகு உணவை கட்டுப்படுத்தியதால், 12 மாதங்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்தேன். நடிப்பதை தாண்டி உடல் ஆரோக்கியமே மிகவும் முக்கியம். யோகா எனக்கு அமைதியையும், உடலுக்கான உறுதியையும் கொடுக்கிறது. தொடர்ந்து யோகாசனங்கள் செய்து வருவதால்தான் என்னை ஆரோக்கியமாகவும், உடலில் எந்த பிரச்னைகளும் இல்லாமல் வைத்திருக்க முடிகிறது’ என்றார்.

Tags : Keerthy ,Keerthy Suresh ,
× RELATED சல்மான்கான் படத்தில் நயன்தாரா