இந்தியில் ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் ஃபீஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் சல்மான்கான், அடுத்து டோலிவுட் டைரக்டர் வம்சி பைடிபள்ளி எழுதி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ‘முன்னா’, ‘பிருந்தாவனம்’, ‘ஊபிரி’, ‘மகரிஷி’, தெலுங்கு மற்றும் தமிழில் ‘தோழா’, ‘வாரிசு’ ஆகிய படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார். சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ‘சிக்கந்தர்’ என்ற படத்தில், கோலிவுட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்தார். ஆனால், படுதோல்வியை சந்தித்த சல்மான்கான், டோலிவுட் டைரக்டராவது தனக்கு ஹிட் கொடுப்பாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா, இதற்கு முன்பு கோலிவுட் டைரக்டர் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்திருந்தார்.
