×

சிக்ஸ் பேக்கிற்கு மாறிய மகத்

சென்னை: சிக்ஸ் பேக் உடலுக்கு மாறியுள்ள மகத் ராகவேந்திரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள ‘Mechanic’ என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது. இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும்.

Tags : Mahath ,Chennai ,Mahath Raghavendra ,
× RELATED சல்மான்கான் படத்தில் நயன்தாரா