×

கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதன்

‘கோமாளி’ படத்தை எழுதி இயக்கி சிறுவேடத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார். தற்போது ‘எல்ஐகே’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், தனது நண்பருக்கு கார் பரிசளித்த வீடியோ வைரலானது. தன்னுடன் முதல் படத்தில் இருந்து இணை இயக்குனராக பணியாற்றிய நண்பருக்கு திடீரென்று பரிசளித்த பிரதீப் ரங்கநாதன், ‘உங்களின் லாயல்டிக்கு எனது சின்ன கிஃப்ட். பம்பரமாக சுழன்று வேலை செய்கிறீர்கள். இது ஒரு தொடக்கம்தான்.

இன்னும் நீங்கள் நிறைய தூரம் பயணித்தாக வேண்டும்’ என்று நெகிழ்ந்தார். அவருக்கு நன்றி தெரிவித்த அந்த நண்பர் கூறுகையில், ‘இது என் முதல் கார். எனது நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்லை. நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் பகிர்ந்த பயணத்துக்கான அழகான சின்னம். இந்த அழகான நினைவை கொடுத்து, எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி. லவ் யூ அண்ணா’ என்றார்.

Tags : Pradeep Ranganathan ,
× RELATED சல்மான்கான் படத்தில் நயன்தாரா