×

பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்ய பாரதி ஆவேசம்

சென்னை: தெலுங்கில் நரேஷ் குப்பிலி இயக்கத்தில் சுதீர், திவ்யபாரதி நடிக்கும் படம், ‘கோட்’. இதன் படப்பிடிப்பில் நரேஷ் குப்பிலிக்கும், திவ்யபாரதிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நரேஷ் குப்பிலி தனது சோஷியல் மீடியாவில், மறைமுகமாக திவ்யபாரதியை குறிக்கும் வகையில் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, நரேஷ் குப்பிலி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தியதாக திவ்யபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்களை ‘சிலக்கா’ அல்லது வேறெந்த இழிவான வார்த்தைகளாலும் அழைப்பதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது பெண் வெறுப்பு சிந்தனையின் பிரதிபலிப்பு. இது ஒருமுறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. அந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதேபோன்று பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். இயக்குனரின் இச்செயலுக்கு இப்படத்தின் ஹீரோவும் அமைதியாக இருப்பதை பார்த்து, இதுபோன்ற கலாச்சாரம் நிலைத்திருக்க உதவுகிறது என்பது ஏமாற்றமாக இருக்கிறது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத சூழல் கொண்ட இடங்களில் பணிபுரிய, அந்த இடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம். மரியாதையை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது உறுதியான நிலை’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Divya ,Bharathi ,Chennai ,Sudheer ,Divya Bharathi ,Naresh Kuppili ,
× RELATED சல்மான்கான் படத்தில் நயன்தாரா