×

ரூ.50 கோடி கேட்டு ஷெர்லின் மீது ஷில்பா ஷெட்டி மானநஷ்ட வழக்கு

சென்னை: ஆபாச படங்கள் தயாரித்து, அவற்றை செல்போன் ஆப்ஸ் மூலம் பதிவேற்றிய புகாரில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு ராஜ் குந்த்ராவின் தொடர் மிரட்டலால் ஷெர்லின் சோப்ரா தனது வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூஹூ காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது மீண்டும் ஷெர்லின் சோப்ரா கொலை மிரட்டல் புகார் கொடுத்தார். இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் ஷெர்லின் சோப்ராவுக்கு  எதிராக 50 கோடி ரூபாய் கேட்டு, வழக்கறிஞர் மூலம் மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘பணம் பறிப்பதற்கான மறைமுக நோக்கத்துடன் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது அவதூறு பரப்பி வருகிறீர்கள். எனவே, பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா வாயிலாக 7 நாட்களுக்குள் பொதுமன்னிப்பு கேட்பதுடன், 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags : Shilpa Shetty ,Sherlyn ,
× RELATED நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது...