×

தமிழ், மலையாளத்தில் உருவாகும் வைரஸ் 2 : பிருத்விராஜ் நடிக்கிறார்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் வைரஸ். ஆஷிக் அபு இயக்கிய இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், பார்வதி, ஆசிப் அலி, டொவினோ தாமஸ், ரேவதி நடித்திருந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நிபா வைரசால் உயிரிழந்த 16 பேரை பற்றிய கதை. அந்த வைரஸ் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது என்பதை சொன்ன படம்.

தற்போது கொரோனா காலத்திற்கும் அந்தப் படம் பொருத்தமாக இருந்ததால் ஓடிடி தளத்தில் லட்சக்கணக்கானவர்கள் அந்த படத்தை பார்த்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளது. இந்த பாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்படுகிறது.

இது தொடர்பாக இயக்குனர் ஆசிக் அபுவும், பிருத்விராஜும் சந்தித்து பேசியுள்ளனர். 2ம் பாகத்தை பிருத்விராஜ் தயாரிக்கலாம் என்று தெரிகிறது. தமிழ், மலையாளத்தில் தயாராவதால் முன்னணி தமிழ் நடிகர் ஒருவரையும் நடிக்க வைக்க இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முறையான அறிவிப்புகள் வர இருக்கிறது.

Tags : Prithviraj ,
× RELATED தமிழகம் வர விரும்பும் புலம்பெயர்ந்த...